Friday, May 11, 2018

கணிணி அறிவோம் - பகுதி 3- APP MANAGEMENT


கணிணி அறிவோம் -  PART 3

*பரிமாற்றம்: மூன்று*


தலைப்பு: App management




வணக்கம்.

சென்ற பரிமாற்றத்தில் memory management குறித்துப் பேசியிருந்தோம்.

சென்ற பரிமாற்றத்தின் doubt பகுதியிலிருந்தே இந்த பதிவை ஆரம்பிப்போம்.

சிறந்த முறையில் memory management செய்தும் என் மொபைலும், கணினியும் hang ஆகிறதே? ஏன்? என சந்தேகம் இருக்கலாம்.

அதற்கு நான் என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம். பொதுவாக appகள் குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்காகவே நாம் install செய்து பயன்படுத்துகிறோம். App என்பது codingகளின் தொகுப்பே.

நாம் நினைப்பதைப் போல நம் screenல் ஒரு appஐ திறந்தால் தான் அந்த app வேலை செய்கிறது என்பதில்லை. நாம் திறக்காமலேயும், பல appகள் தன்னிச்சையாக திறந்துகொண்டு screenற்கு பின்னால் இயங்கிக்கொண்டிருக்கும். அவற்றை background apps என அழைக்கிறார்கள்.

Computer:
Ctrl+alt+del click செய்து processes click செய்தால் அங்கு இயங்கிக்கொண்டிருக்கும் அனைத்து appகளும் தெரியும், running programs எனும் tabல் மிகக் குறைவான appகளே தென்படும். அதிலிருந்து பெயர் படித்துப் பார்த்து நாம் தேவையற்றவற்றை close செய்துவிடலாம்.

Mobile:

Screenன் கீழ் உள்ள இடது அல்லது வலது பட்டனைத் தொடும் போது recent apps காட்டும். Close all click செய்து அனைத்தையும் எப்போதும் காலியாகவே வையுங்கள். இதில் அதிகமான appகள் திறந்திருக்கும்  பட்சத்தில் mobile தானாகவே வேகம் இழக்கும். நமக்கும் ஏனென்றே புரியாது. இதுவுமல்லாமல் 360° போன்ற utility tool பயன்படுத்தும் போது உண்மையில் எத்தனை background apps running என்பதைப் பார்க்கலாம். அவற்றையெல்லாம் close செய்த பின்னர் உங்கள் மொபைல் வேகமாக இயங்கத்தொடங்குவதை நீங்கள் கண்கூடாகக் காணலாம்.

இதெல்லாம் செய்தாலும் என் மொபைலோ, சிஸ்டமோ hang ஆகிறது, crash ஆகிறது என்றால் வைரஸைத் தவிர ஒரே காரணம் தான் இருக்க முடியும்.
 அது என்னவென்றால் same platform appsன் பயன்பாடே ஆகும்.


Computer:

உதாரணமாக சிஸ்டமில் Antivirus பயன்படுத்தும் போது, நம்மில் சிலர் ஒன்றிற்கும் மேற்பட்ட antivirusகள் பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்துவது நம் பாதுகாப்பை மேலும் கூட்டுகிறது என நினைத்துக்கொள்கிறோம். அது முற்றிலும் தவறு. பொதுவாகவே அனைத்து antivirusகளும் பின்னால் இருந்து இயங்கக்கூடியவை. ஒரே நேரத்தில், ஒரே வேலையைச் செய்ய இரு softwareகளை பணிக்கும் போது, எது அந்த வேலையைச் செய்வது என்பதில் வரும் முரண்பாடே நம் PC/laptop hang or crash ஆகிறது.

Mobile:

360, C cleaner போன்ற utility toolsகள் background apps ஆக இயங்கக்கூடியவை. இவை ஒரே சமயத்தில் இயங்குவதால் நம் மொபைல் hang or crash ஆகிறது. ஆகையால் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை uninstall செய்திடுங்கள்.

Doubt:
இதெல்லாம் கூட செய்துவிட்ட பின்பும் என் மொபைலும், சிஸ்டமும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்ன? அதிலிருந்து நான் எப்படி என் deviceஐ பாதுகாத்துக்கொள்வது?

பதில்: அடுத்த பரிமாற்றத்தில்...

No comments:

Post a Comment