Friday, May 11, 2018

கணிணி அறிவோம் - பகுதி 1 - RAM

கணிணி அறிவோம் - பகுதி 1

நமது தாய்த்தமிழில் , எளிய நடையில் கணிணி அறிவியலை மொபைல் பயன்பாட்டினை புரிந்து கொள்ள  இத் தொடரை சமர்ப்பிக்கிறது...




*பரிமாற்றம் : ஒன்று*

*தலைப்பு: settings-> hardware information/memory*




அன்பிற்குரியவர்களே,
நம்மில் பலருக்குத் தெரிந்திருந்தாலும் முதல் படியிலிருந்தே ஆரம்பிக்கலாமெனத் தோன்றுகிறது. இது எனது 22வருட கணினிப் பயன்பாட்டின் தொகுப்பே. எவ்வகையான சந்தேகங்களும் வரவேற்கப்படுகின்றன.

மேசைக் கணினியோ, மடிக்கணினியோ, கைப்பேசியோ எதுவாயிருந்தாலும் அதனைப் பற்றிய அடிப்படைப் புரிதல்கள் மிக அவசியமானவை.

அவ்வகையில் ஒரு deviceற்கு மிக முக்கியமாக அதன் செயல்திறனும், அதன் நினைவாற்றலும் மிகவும் முக்கியம்.

உங்கள் கணினியின் தகவல்களை 'My Computer' எனும் iconஐ right click செய்து propertiesஐ க்ளிக் செய்தால் அதன் Memory மற்றும்  processor சார்ந்த தகவல்கள் தெரியவரும்.

இது தான் அடிப்படையில் நாம் அறிந்திருக்க வேண்டிய முதல் நிலை.

கைப்பேசியின் தகவல்கள் settings->system->hardware information எனும் இடத்தினில் இருக்கும்.

எப்போது யாருடைய புதிய மொபைலை வாங்கிப் பார்த்து வாழ்த்து சொன்னாலும் அந்த புதிய பொபைலின் settings->system எனும் மெனுவிற்குள் உள்ள அனைத்து sub menusற்கு உள் அளிக்கப்பட்டுள்ள விவரங்களைப் படித்து பரிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஒரு deviceன் விலை, பல்வேறு வகையான செயல்பாடுகள், செயல்திறன் இவை அனைத்தைப் பற்றிய அறிவுமே நமக்கு இதன் மூலமாகக் கிடைப்பவை தான்.

பொதுவாகவே உங்கள் device இயங்கும் வேகம் அதன் clock speedஐப் பொறுத்தது. அதன் RAM எனப்படும் RANDOM ACCESS MEMORY அதிகமாக இருக்கும் பட்சத்தில் பல்வேறு வகையான வேலைகளை நாம் தாமதமின்றிச் செய்துவிடலாம்.
உங்கள் மொபைலோ அல்லது கணினியோ எவ்வளவு அதிகமான மெமரியைப் பெற்றிருந்தாலும், அதன் RAMன் அளவு அதிகமாய் இருத்தல் நல்லது.

Doubt : என் RAM ன் அளவு மற்றவர்களைப் போல இருந்தும் என் மொபைலோ, கணினியோ அவ்வளவு வேகமாக இயங்குவதில்லையே, ஏன்?

பதில்: அடுத்த பரிமாற்றத்தில்...

No comments:

Post a Comment